Sunday, October 25, 2009

VAALIBAN


மன்மதன், வல்லவன் படங்களில் தனது நடிப்பை தாண்டிய அடையாளத்தையும் பதிவு செய்த சிம்பு, அடுத்ததாக ஏறப்போகிற குதிரை வாலிபன். இந்த படத்தை டிராப் செய்து விட்டார்கள் என்று முதலில் கிசுகிசுக்கப்பட்டது. பிறகு இல்லை. இதுதான் அவரது அடுத்த படம் என்று பேசப்பட்டது. சிம்புவின் விளக்கம் என்ன? போடா போடியும் வரும். வாலிபனும் வரும் என்கிறார். இதில் முதலில் வருவது எது என்ற பஞ்சாயத்தை பிறகு வைத்துக் கொள்ளலாம்.

வாலிபன் படத்தை நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி தயாரிக்கிறாராம். முதலில் இவரிடம் கதை சொன்னவர் விக்னேஷ்ராஜா என்ற உதவி இயக்குனர். இவரை சிம்புவிடம் கதை சொல்ல அனுப்பினாராம் சக்கரவர்த்தி. அங்கே மாறியது விக்னேஷின் தலையெழுத்து. படத்தை நானே இயக்குகிறேன் என்று கூறிவிட்ட சிம்பு, கதை திரைக்கதை வசனம் என்று தனது பெயரையே முன்னிறுத்த, அப்ப நானு? என்று அப்பாவியாக கேட்டாராம் விக்னேஷ். கதையை கொடுத்திட்டு காசு வாங்கிட்டு போங்க என்று பதில் சொல்லப்பட்டதாம். வேணும்னா படத்திலே இணை இயக்குனராக பணியாற்றலாம் என்ற சலுகையை(?) கொடுத்தாராம் சிம்பு.
என்ன செய்வது என்று முழித்த விக்னேஷ், கதை என்னுடையதாக இருக்கட்டும். திரைக்கதை, வசனம், டைரக்ஷன் பொறுப்பை நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்ல சரி என்ற முடிவுக்கு வந்தார்களாம் அத்தனை பேரும். விக்னேஷ் இயக்கப் போகும் அடுத்த படத்திற்கு கால்ஷீட் தருவதாக இப்போதைக்கு கூறியிருக்கிறாராம் சிம்பு.
இதற்கிடையில் போடா போடியில் நடிக்க மறுத்துவிட்டார் வரலட்சுமி. இதனால் கமல் மகள் ஸ்ருதியிடம் கால்ஷீட் கேட்டு வருகிறாராம் சிம்பு. அவரோ, நடிப்பே வேண்டாம். இசையமைப்பாளராக ஆவதே லட்சியம் என்கிறாராம். சட்டுபுட்டுன்னு ஏதாவது ஒரு படத்தை ஆரம்பிங்க சாரு..

No comments:

Post a Comment