
அஜீத் அசல் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சிம்புவும் கவுரவ வேடத்தில் நடிக்கப்போவதாக செய்தி வெளியானது. வெங்கட் பிரபு இயக்கும் கோவா படத்தில் சில நிமிடங்கள் வருகிறார். அதுபோல் அசல் படத்துக்கும் அவர் அழைக்கப்பட்டுள்ளார் என்று கூறப்பட்டது. இது பற்றி சிம்புவிடம் கேட்ட போது மறுத்தார். அவர் கூறியதாவது:-
நான் அஜீத்தின் ரசிகன் அவருடன் சேர்ந்து நடிக்க வாய்ப்பு கிடைத்தால் சந்தோஷப்படுவேன். அது எனக்கு பெருமையாகவும் இருக்கும். ஆனால் இதுவரை சேர்ந்து நடிப்பதற்கான எந்த ஆயத்தமும் நடக்கவில்லை. அசல் பட தயாரிப்பாளரிடம் இருந்தோ அல்லது அஜித் தரப்பிலோ யாரும் என்னை தொடர்பு கொண்டு இது சம்பந்தமாக பேசவில்லை.
அஜீத் ரசிகர்கள் என்மேல் அளவு கடந்த அன்பு வைத்துள்ளனர். இது போன்ற தவறான புரளிகளால் அவர்கள் குழப்பமடைய கூடாது.
இவ்வாறு சிம்பு கூறினார்

No comments:
Post a Comment